November 3, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டது.

கொழும்பிலிருந்து வருகை தந்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவரின் உறவினர்களின் நான்கு கடைகள் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரியினால் மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த கடை உரிமையாளர்களுக்கு முதலாவது PCR பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த கடைகளை திறப்பதற்கு ...

மேலும்..

முல்லைத்தீவு-மாங்குளம் மல்லாவி வீதியில் யானை தாக்கி ஒருவர் மரணம்!

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் நகரிற்கு அண்மையாக யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று(03) இரவு 10.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இத் துன்பியல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது: மல்லாவியில் தொழில் நிமித்தமாக தங்கியிருந்த நிலையில் நேற்றிரவு ...

மேலும்..

விசேட அதிரடிப்படையின் 3 முகாம்கள் தனிமைப்படுத்தலுக்கு…..

கொரோனா தொற்று காரணமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 3 முகாம்களை தனிமைபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களனி, களுபோவில மற்றும் ராஜகிரிய ஆகிய பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம்களே இவ்வாறு தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 56 பேர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் ...

மேலும்..

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு;உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு .

 கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்  சிகிச்சை பெற்று வந்த    நபரொருவர்    உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

மேலும்..

கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்துடன் தொடர்புகொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள்.

கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்துடன் தொடர்புகொள்வதற்கு துரித தொலைபேசி இலக்கங்களை (Hotline) அறிமுகப்படுத்தியிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொவிட் 19 வைரசு மற்றும் அத்துடன் தொடர்புபட்ட நிலைமையின் போது பொதுமக்களுக்கு கொவிட் 19 ...

மேலும்..

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்குவதற்கு ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்…

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு அமைய, ஜனாதிபதிக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தின் துணிவிலாவது, கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இறந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். இன்று  (03) பாராளுமன்றில் ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட கொரோனா பாதுகாப்பு செயலணியின் விசேட கலந்துரையாடல்…

கிளிநொச்சி மாவட்ட கொரோனா பாதுகாப்பு செயலணியின் விசேட கலந்துரையாடல். மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மாவட்டச்செயலக அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் சுகாதாரத்திணைக்கள அதிகாரிகள் பொலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் ...

மேலும்..

காத்தான்குடியில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்…

(எம்.எஸ்.எம். நூர்தீன்) காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று (03) ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். குறித்த நபர் கொழும்புக்கு வேலை நிமிர்த்தமாக சென்று வந்து இருந்தவர். இவர் சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா ...

மேலும்..

நாளை யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான 5000 ரூபா நிவாரணப்பொதி …

சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான 5000 ரூபா  நிவாரணப்பொதி  நாளையிலிருந்து விநியோகிக்கப்பட வுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். Covid19 தொற்று  பரவல் அச்சத்தின் காரணமாக  சுய தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு அரசினால்  இடர் கால நிவாரணமாக 5000 ரூபா பெறுமதியான உணவு ...

மேலும்..

அமெரிக்காவின் வேட்டை பற்களை கழட்டுவதென்றால் யார் வெற்றிபெற வேண்டும் ? இஸ்லாமிய உலகிற்கு ஆபத்துகுறைந்தவர் யார் ?

உலகம் இன்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது அமெரிக்கா என்னும் உலக சண்டியனின் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பதாகும். கருத்துக் கணிப்புக்களில் இன்றைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடுகின்ற ஜோ வைடன்தான் வெற்றிபெறுவார் என்று கூறப்படுகின்றது. இதுபோல் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் ...

மேலும்..

தொற்றுக்குள்ளான மாணவி பரீட்சை எழுத விசேட ஏற்பாடு…

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான க.பொ.த. உயர்தர மாணவிஇ பரீட்சை எழுத இன்று (3) விசேட ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றி வரும் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மாணவியொருவருக்கு, கொரோனா ...

மேலும்..

ஓட்டமாவடி பகுதியில் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்லும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்…

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் டெங்கு நோய்த் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியைச் சேர்ந்த பலர் டெங்கு நோய்த் தாக்கத்தினால் பாதிப்படைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் ...

மேலும்..

ஆளுநர் உட்பட ஒரு சில அதிகாரிகள் அரசியற் பின்பலத்துடன் செயற்படுத்தும் திட்டமே மயிலத்தமடு, மாதவணை காணி விடயம்…

அயல் மாவட்டங்களில் காடுகள் இல்லாதது போன்றும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தான் காடுகள் இருப்பது போன்றும் அயல் மாவட்ட பெரும்பான்மை இனத்தவருக்கு சேனைப் பயிர்செய்கைக்காக காணிகள் கொடுப்பதென்பது மட்டக்களப்பில் எதிர்காலத்தில் சிறுபான்மையினரின் இனப்பரம்பலைக் குறைப்பதற்காக ஆளுநர் உட்பட ஒரு சில அதிகாரிகள் ...

மேலும்..

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தில் முதுதத்துவமாணி மற்றும் கலாநிதி பட்டக் கற்கை நெறிகள் ஆரம்பம்

    (பாறுக் ஷிஹான்) ஒலுவில் -தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நான்காவது பீடமாக ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப்பீடமானது இஸ்லாமிய கற்கைகள் துறையில் முதுதத்துவமாணி மற்றும் கலாநிதி பட்டங்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது (ஆய்வு வழியாக). இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களின் சீரிய வழிகாட்டலின் கீழ் , இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீட ...

மேலும்..

மடு கல்வி வலயத்திற்கு வடக்கு மாகாண சபையினால் பேருந்து ஒன்று அன்பளிப்பு

மடு கல்வி வலயத்திற்கு வடக்கு மாகாண சபையினால் பேருந்து ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. மடு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் நலன் கருதி மடு வலயக்கல்வி பணிமனையின் கோரிக்கைக்கு அமைவாக வடமாகாண சபையின் பிரதம செயலாளர் அவர்களினால் வடக்கு மாகாண ...

மேலும்..

தென்மராட்சியில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் (slrc) இன்றைய தினம் சாவகச்சேரி பிரதேச செயலகம் , சாவகச்சேரி நீதிமன்றம் , சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையம், கொடிகாமம் சந்தை ஆகிய பகுதிகளில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதோடு கொரோனா தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது கொரோனா ...

மேலும்..

தென்கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் பேராசிரியராக பதவியுயர்வு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது சமூகவியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இப்பதவி உயர்வு 05.09.2019 முதல் அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேற்பட்ட இலங்கை தென்கிழக்குப்  பல்கலைக்கழக வரலாற்றில் பீடாதிபதி ஒருவர் பேராசிரியராக பதவி உயர்வு பெறுவது இதுவே முதற் தடவையாகும். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்திலேயே கல்வி கற்று, அப்பீடத்தின் பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட இளம் விரிவுரையாளரான கலாநிதி றமீஸ் அபூபக்கர் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.   இலங்கையில் சமூகவியல் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றிருப்பவர்கள் மிகச்சொற்பமானவர்களே. அதிலும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் சார்பில் சமூகவியல் பேராசிரியர் விடயத்தில் பாரிய வெற்றிடம் நிலவுகின்றது. இவ்வெற்றிடத்தினை நிரப்பும் வகையில் இலங்கையின் முதலாவது முஸ்லிம் சமூகவியல் பேராசிரியராக இளம் கல்விமானும் சமூகச் செயற்பாட்டாளருமான பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் பதவி உயர்வு பெறுவது பாராட்டத்தக்கது. இப்பதவி உயர்வின் மூலம் தனது பல்கலைக்கழகத்திற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் தேசத்திற்கும் பங்காற்றக்கூடிய ஒருவராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் மிளிர்வார் என்பதில் ஐயமில்லை.சாய்ந்தமருதினைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், சாதாரண குடும்பப் பின்னணியினைக் கொண்டவர். இவர் மிஸ்கீன் பாவா அபூபக்கர் மற்றும் உதுமான்கண்டு வதவியத்தும்மா ஆகியோரின் மூன்றாவது பிள்ளையாவார். மூன்று சகோதரிகளையும் ஒரு சகோதரரையும் உடன் பிறப்புக்களாகக் கொண்ட பேராசிரியர், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ஆசிரியை சில்மியத்துல் சிபானாவினை மணமுடித்துள்ளார். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் தனது ஆரம்பக் கல்வியினை சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியினை கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலும் கற்றுக்கொண்டார். பல்கலைக்கழக கல்வியினை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இப்பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையினைக் கற்ற ஆரம்ப மாணவர் தொகுதியினைச் சேர்ந்த இவர், சமூகவியல் துறையில் முதல் வகுப்புச் சித்தியினையும் பெற்றுக்கொண்டார். 2005இல் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக இணைத்துக் கொள்ளப்பட்ட பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், 2006ஆம் ஆண்டு அதே பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை நிரந்தர விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் சமூகவியல் முதுதத்துவமாணிப் பட்டத்தினை (2010) பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் முரண்பாடு மற்றும் சமாதானம் தொடர்பான பட்டப்பின்படிப்பினை(2010) இங்கிலாந்தின் புகழ்பெற்ற பிரட்போர்ட் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார். தனது கலாநிதி பட்டப்படிப்பினை உலகில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக விளங்கும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். இக்கற்கையினைத் தொடர்வதற்கான ஆய்வுப் புலமைப்பரிசிலினை பெற்றுக்கொண்ட பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், புகழ்பெற்ற கல்விமான் பேராசிரியர் செய்ட் பரீட் அலடாஸின் வழிகாட்டலின் கீழ் தனது ஆய்வினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  சமூகப் பிரச்சினைகள், தொடர்பாடல், இனத்துவம், அரசியல் சமூகவியல், சிறுபான்மைக் கற்கைகள் முதலிய ஆய்வுப் பரப்புக்களில் நிபுணத்துவம் பெற்றுள்ள இவர், 2011இல் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் இரண்டிற்கும், 2017இல் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் ஒன்றிற்கும் பதவியுயர்த்தப்பட்டார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பிரிவினை தனியான ஒரு துறையாக நிறுவுவதில் பெரும் பங்காற்றிய பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், 2017ஆம் ஆண்டு அத்துறையின் முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகத்தின் மாணவர் நலன்புரி சேவைகள், சர்வதேச தொடர்புகள், பல்கலைக்கழக ஆசிரியர் விருத்தி நிலையங்களின் பணிப்பாளராகவும் இவர் செயற்பட்டுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பதவி நிலைகளை வகித்த பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், 2019ஆம் ஆண்டு கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு தற்போது வரை அதன் பீடாதிபதியாக செயற்பட்டு வருகின்றார். பீடாதிபதி என்றவகையில் தனது பீடத்தின் தரத்தினை மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இவரது அயராத முயற்சியின் பயனாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஐந்து துறைகளினால் (அரசியல் விஞ்ஞானம், சமூகவியல், மெய்யியல், புவியியல், தமிழ்) பட்டப்பின்படிப்புக் கற்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எமது பிரதேசத்தினை சேர்ந்த மாணவர்கள் முதுதத்துவமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச ஆய்வு மாநாடுகளில் பங்கேற்று ஆய்வுரை ஆற்றியுள்ள இவர், உலகத் தரம் வாய்ந்த ஆய்வுச் சஞ்சிகைகள் பலவற்றில் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் தனது ஆய்வு வெளியீடுகளுக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆய்வாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். உலகத் தரம் வாய்ந்த சஞ்சிகைகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டமைக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூதவையினால் வழங்கப்படும் கௌரவப் பட்டத்தினை பல முறை பெற்ற பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், ஆசிய மன்றம் உள்ளிட்ட பல சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களிடமிருந்து ஆய்வு நிதிகளை வெற்றி கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவர் 2019இல் கெய்சிட் என அழைக்கப்படும் வியன்னாவில் உள்ள சர்வதேச சம்பாஷனை  நிலையத்தின் பட்ட அங்கீகாரத்தினைப் (பெலோசிப்) பெற்றுள்ளார்.        இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒரு மாணவனாகவும் சமூகத்தில் ஒரு இளம் ஆய்வாளராகவும் இப்பிராந்தியத்தின் சிறந்த கல்விமானாகவும் இந்நாட்டின் சிறந்த குடிமகனாகவும் செயற்படும் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர், பேராசிரியராக பதவி உயர்வு பெற்றிருப்பது சமூகத்திற்கு பெருமை சேரக்கின்றது.   (பாறுக் ஷிஹான்)

மேலும்..

மட்டக்களப்பில் கொரோனா தாக்கத்தினால் வாழ்வாதராம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் .

மட்டக்களப்பில் கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சிகை அலங்கார தொழில் புரிபவர்களின் குடும்பங்களுக்கும், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வர்களுக்குமான மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் மாவட்ட செயலகத்தினால் பெற்றுக் கொடுக்க மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய ...

மேலும்..

கொரோனா -மேலும் 332 பேர் குணமடைவு: 5,581 பேர்; நேற்று 275 பேர் அடையாளம்: 11,335 பேர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 332 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் Brandix ஆடைத் தொழிற்சாலை கொத்தணியைச் சேர்ந்தவர்களாவர்.நேற்றையதினம் (02) Brandix ஆடைத் தொழிற்சாலை கொத்தணி, பேலியகொடை மீன் சந்தை கொத்தணி உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 275 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இன்று (03) முற்பகல் 10.00 மணியளவில் ...

மேலும்..

அக்கரைப்பற்றில் -தனிமைப்படுத்திய குடும்பத்தினர்களுக்கு உதவி.

கோவிட் -19 தொற்று அச்சம் காரணமாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் தனிமை படுத்திய குடும்பத்தினர்களுக்கு முதற்கட்டமாக அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாயல் தலைவரும், அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினருமான எஸ்.எம் சபீஸ் ஊடாக இன்று காலை உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் மரக்கறி ...

மேலும்..

பாராளுமன்ற சபைக்கு பிரதமர் மஹிந்தவின் பிரதிநிதியாக அமைச்சர் டக்ளஸ் நியமிப்பு

20வது திருத்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள பாராளுமன்ற சபையின் பிரதமரின் பிரதிநிதியாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்த யோசனைக்கு சபாநாயகர் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.   20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய பாராளுமன்ற சபையின் கட்டமைப்பு மாற்றம் பெறும். அதற்கமைய பாராளுமன்ற சபை பிரதமர், ...

மேலும்..

வவுனியா நெளுக்குளம் பகுதிக்கு பல மாதங்களுக்கு பின்னர் நிரந்தர கிராம சேவையாளர் நியமனம்.

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் கடந்த பல மாதங்களாக நிரந்தர கிராம சேவையாளர் இன்மையினால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில் தற்போது அப்பகுதிக்கு நிரந்தர கிராம சேவையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். நெளுக்குளம் கிராமசேவையாளராக கடமையாற்றிய பெண் ...

மேலும்..

கூட்டங்களில் கலந்து கொள்ளவதாயின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் எத்தனை நாட்கள் சிறையில் இருப்பது எத்தனை நாட்கள் வெளியில் இருப்பது-பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா

    பாராளுமன்றம் உட்பட மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் சந்திரகாந்தன் கலந்து கொள்ள வேண்டும் என்றால் எத்தனை நாட்கள் அவர் சிறையில் இருப்பார், எத்தனை நாட்கள் வெளியில் இருப்பார் என்பது தொடர்பில் சிறைச்சாலை அத்தியேட்சகர் சிந்திக்காமல் முடிவெடுக்க மாட்டார் என தமிழ்த் ...

மேலும்..

பெரும்பான்மை வாக்குகளினால் பருத்தித்துறை பிரதேச சபை ‘பட்ஜட்’ நிறைவேற்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது வருடமாகவும் பெரும்பான்மை வாக்குகளால் வரவு - செலவுத் திட்டம் நிறைவேறியுள்ளது. இதற்கு ஆதரவாக 16 பேரும், எதிராக 4 பேரும் ...

மேலும்..

கல்வி அமைச்சிலும் ஒருவருக்கு கொரோனா-மூடப்பட்டது கட்டிடம்

கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கல்வியமைச்சின் இசுறுபாய கட்டிடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்று உறுதியாகிய ஊழியர் நெருக்கமாகப் பழகிய பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அமைச்சின் வளாகமும் தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்..

பல்கலைக்கழக அனுமதி : மேலதிகமாக 10,000 பேருக்கு சந்தர்ப்பம் – மேன்முறையீடு செய்ய கோரிக்கை

நாட்டில் உள்ள பல்கலைக்கழக கட்டமைப்பிற்கு இந்த வருடத்தில் இணைத்துக்கொள்ளப்படும் மேலதிக மாணவர்களின் எண்ணிக்கை 10,000 ஆகும். இவர்களுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த வருடத்தில் பல்கலைக்கழக பிரவேசத்தில் உள்வாங்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 30,000 ஆகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ...

மேலும்..

கொரோனா 3 மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சர் தெரிவித்த கருத்து

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு இன்றும், நேற்றும் உயிரிழந்த மூன்று பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று ஐக்கிய மகக்ள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான அசோக் அபேசிங்க, 21,22 மற்றும் 23ஆவது கொரோனா மரணங்கள், ...

மேலும்..

அரசியலமைப்பில் உள்ள உரிமையை மக்களுக்கு வழங்கியதால் என்னை சிறைதள்ளியிருக்கிறது அரசாங்கம்-நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியூதீன்

அரசியலமைப்பில் உள்ள உரிமையை மக்களுக்கு வழங்கியதால் என்னை சிறைதள்ளியிருக்கிறது அரசாங்கம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றத்தில் இன்று ஆவேசமாக கருத்து வெளியிட்டார்.கடந்த 15 நாட்களாக சிறையிலிருந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்திற்கு வந்த அவர் சபையில் உரையாற்றினார். ‘இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்குரிமை கொடுத்ததால் சிறை தள்ளப்பட்டேன். 30 வருடமாக அவர்கள் வாக்களிக்க சென்றார்கள். ஆனால் இம்முறை ...

மேலும்..

கொரோனாவை பயன்படுத்தி தமிழர்களை அச்சுறுத்தும் படை-சபையில் குற்றச்சாட்டு

கொரோனா சட்டங்களை பாதுகாப்பு பிரிவு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கே பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய தமிழ் மக்கள் தேசிய காங்கிரஸின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து உரையாற்றினார். ‘யாழில் உள்ள தமது கட்சியில் திடீரென ...

மேலும்..

காத்தான்குடி பிரதான வீதியில் பலசரக்கு வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தினால் பல கோடி பெறுமதியான பொருட்கள் முற்றாக எரிந்து நாசம் .

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் பலசரக்கு வர்த்தக நிலையமொன்றில் செவ்வாய்கிழமை (03) காலை ஏற்பட்ட பாரிய தீவிபத்தினால் பல கோடி பெறுமதியான பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவில் குறித்த வர்த்தக நிலையத்தினுள் ஏற்பட்ட ...

மேலும்..

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு 14ம் திகதி வரை விளக்கமறியல்.

முல்லைத்தீவு மாங்குளம் நகர் பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரை நேற்று(02)முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிவான் நீதிமன்ற வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். குறித்த நபர் மாங்குளம் நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சோதனை செய்த ...

மேலும்..

கொவிட் – 19 தொற்று தற்போது சமூகத்தில் வலுவாக பரவுவதனால் சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்-யாழ் மாவட்ட போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா.

கொவிட் - 19  தொற்று தற்போது சமூகத்தில் வலுவாக பரவுவதனால் அது சிறுவர்களைத் தாக்கும் போது சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என யாழ் மாவட்ட போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார். கொவிட் 19 நோய் சமூகத்தில் பரவுகின்றபோது சிறுவர்களையும் அதிகளவாக ...

மேலும்..

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு இறுதி நாள் இன்று

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலானது அமெரிக்காவின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல் உலகம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு எந்தப் பாதையை நோக்கிச் செல்லும் என்பதை தீர்மானிக்கக் கூடிய அமெரிக்க அதிபர் தேர்தல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அடுத்த சில நாட்களில் உலகின் சக்தி வாய்ந்த நபர் யார் என்பதை ...

மேலும்..

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 02 மரணம் …..

கொரோனா தொற்று காரணமாக. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர் . இதனையடுத்து கொரோனா தோற்றால் இலங்கையில் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 23 ஆக அதிகரித்ததுள்ளது . கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவர். கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதுடைய ...

மேலும்..

புதுக்குடியிருப்பில் இருவருக்கு கொரோனாத் தொற்று

யாழ்ப்பாணம் கொரோனா ஆய்வு கூடத்தில் நேற்று(02) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் இருவருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்தவர்களில் முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவருக்கு ...

மேலும்..

திருமலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

திருகோணமலை-பாலையூற்று பகுதியில் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான பாழடைந்த விடுதிக்குள் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சடலம் இன்று (03) காலை மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை,மஹமாயபுர,மட்கோ பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான ஏ. பீ. விஜயபால (67வயது) எனவும் தெரியவருகின்றது. தனது ...

மேலும்..

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், சென்னையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்:பிரசார வாகனமும் தயார் !

      மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், சென்னையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதற்கும் முன்னதாக, தலை நிமிரட்டும் தமிழகம் என்று பிரசார வாகனத்தையும் தயார் செய்து துரிதமாக செயல்பட்டு ...

மேலும்..